uganda frank nsubuga news

உகாண்டா என்றழைக்கப்படும் உகாண்டாக் குடியரசு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக கிழக்கில் கென்யாவும் வடக்கில் சூடானும் மேற்கில் காங்கோவும் தென…
உகாண்டா என்றழைக்கப்படும் உகாண்டாக் குடியரசு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக கிழக்கில் கென்யாவும் வடக்கில் சூடானும் மேற்கில் காங்கோவும் தென்மேற்கில் ருவாண்டாவும் தெற்கில் தான்சானியாவும் உள்ளன. இதனுடைய தலைநகரம் கம்பாலா ஆகும். இதன் மொத்த பரப்பளவு 2,36,040 சதுர கிலோ மீட்டர். நிலநடுக்கோட்டுப் பகுதியில் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. இதன் பெரும்பகுதி பீடபூமியில் அமைந்துள்ளது. எரிமலைத் தொடர்கள் கிழக்கிலும் மேற்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. எல்கான் மலை இதன் உயர்ந்த மலையாகும். விக்டோரியா ஏரியின் ஒரு பகுதி உகாண்டாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
  • தலைநகரம் மற்றும் பெரிய நகரம்: கம்பாலா
  • ஆட்சி மொழி(கள்): ஆங்கிலம், சுவாஹிலி
  • மக்கள்: உகாண்டர்
  • அரசாங்கம்: மக்களாட்சிக் குடியரசு
  • மொ.உ.உ. (கொ.ஆ.ச.): 2011 மதிப்பீடு
  • மொ.உ.உ. (பெயரளவு): 2011 மதிப்பீடு
  • ஜினி (1998): 43 · மத்திமம்
தரவை வழங்கியது: ta.wikipedia.org